இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.50 கோடியை தாண்டியது

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,31,562 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,44,96,894 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று வரை 1,127 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 1,158 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 93,58,79,495 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 220.68 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.