இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நெறுங்கி விபத்து... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!!

 

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானமதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம கிஷ்ட்வர் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில் நெறுங்கிய விமானத்தின் பாகங்கள் அங்கு ஓடிக்கொண்டிருந்த மருசுதார் நதியில் அடித்துச் செல்லப்பட்டது. நதியில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராணுவத்திற்கு விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எஞ்சிய 1 பயணியை தேடும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாகவே ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த இரு மாதங்களில் துர்வ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும். கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று சீட்டா ரக ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கர்னல் வினய் பானு ரெட்டி, மேஜர் ஜெயந்தா என்ற இரு ராணுவ விமானிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராணுவ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.