ஜார்க்கண்ட் ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்! பயணிகள் மீது ரயில் மோதி விபத்து.. 12 பேர் பலி!
ஜார்க்கண்ட் அருகே பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் `12 பேர் உயிரழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அந்த ரயிலின் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
பின்னர், ரயிலில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்துள்ளனர், அப்போது எதிர்புறத்தில் வந்த ரயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்படுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ஜம்தாரா சப்-டிவிஷன் போலீஸ் அதிகாரி எம்.ரஹ்மான் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் சிலர் ரயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக மறுபுறம் இறங்கியதாகவும், அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரயில் மோதியதாகவும் தெரிவித்தார்.