நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்.. நூலிழையில் உயிர் தப்பிய அமித்ஷா.. பரபரப்பு வீடியோ

 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில், வரும் மே 7-ம் தேதி மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பி இருக்கின்றது. இதனால், நல்வாய்ப்பாக உயிர் தப்பி இருக்கிறார் அமித்ஷா. பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்து வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

பீகார் மாநிலத்தின் பெகுசராய் பகுதியில் இருந்து அமித்ஷா அவரது தனி ஹெலிகாப்டரில் புறபட்டு இருக்கிறார். அப்போது, அங்கு பலத்த காற்று வீசியதாக சொல்லப்படுகிறது. ஹெலிகாப்டர் அப்பகுதியில் இருந்து கிளம்பியபோது பைலட் அதன் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார். நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் தரையில் இருந்து பறந்து சில வினாடிகளுக்கு மேலே பறக்கவும் இல்லாமல் தரையை அடையவும் இல்லாமல் தடுமாறியது.

பிறகு, நல்வாய்ப்பாக ஹெலிகாப்டர் பறந்தது. இதில் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேலும், மிகப்பெரிய ஹெலிகாப்டர் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு வீசிய பலத்த காற்றினால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறாதா என விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டு இருக்கறது.