அடுத்த 4 நாட்கள் கேரளாவில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

 

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.