இமாசல பிரதேசத்தில் கனமழை.. நிலச்சரிவால் சரிந்து விழும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள்.. அதிர்ச்சி வீடியோ!

 

இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகவெடிப்பு காரணமாக இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எப்), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (எஸ்டிஆர்எப்), ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.