இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை.. டார்ச் லைட்-வுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை!

 

ஆந்திராவில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இருந்தபோதும், இரவில் அங்கு சிகிச்சைக்காக நோயாளிகள் பலர்  வந்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திராவில் உள்ள குருபம் சமூக சுகாதார மையத்தில் மருத்துவப் பணியாளர்கள் 2 நோயாளிகளுக்கு மொபைல் போன்களின் ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. மின்வெட்டுக்கு அவசர சுமை குறைப்பு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை பிரேக் செயலிழந்ததால் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த 8 பேரில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த உடனேயே, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.