கச்சத்தீவை இலங்கைக் கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது.. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

 

தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவை இலங்கை நாட்டிற்கு கொடுத்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இலங்கைக்குச் செல்லும் நிலையில் பாராளுமன்றத்தில் கச்சத்தீவு குறித்து நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.