80 கோடி ஏழை மக்களுக்கு.. பிரதமர் மோடியின் இலவச ரேஷன் அறிவிப்பு!

 

ஒன்றிய அரசின் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மக்கள் நலனுக்காக 2020 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மோடி அரசு வழங்கி வருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா உள்ள குடும்பங்கள், முன்னுரிமை குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், ஒற்றைப் பெண்கள் அல்லது ஒற்றை ஆண்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர். 

இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறினார். கரீப் கல்யாண் யோஜ்னா குறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வெளியிட்ட வரவேற்பு வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை குறிவைத்து பிரதமர் மோடி, ஏழைகளுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் காங்கிரஸ் ஒருபோதும் வழங்கியதில்லை என்று கூறினார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளை மதிப்பதில்லை என்றும் பாஜக மக்களுக்கான அரசு என்றும் பிரதமர் கூறினார்.