ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி.. அதிர்ச்சி வீடியோ
பீகாரில் ரயில் நிலையம் அருகே இயங்கி வந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு அடுக்குமாடி ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உயிரிழந்த 6 பேரில் 3 பெண்களும் அடங்குவர். உயிரிந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் யார் என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.