ஓட்டலில் 2 காதலருடன் ஆட்டம் போட்ட பெண் டாக்டர்.. அதிரடியாக அறைக்குள் புகுந்த டாக்டர் கணவர்!

 

உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் ஓட்டல் குளியலைறையில் 2 காதலர்களுடன் இருந்த பெண் மருத்துவரை அவரது கணவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் கணவரான டாக்டருக்கு வந்துள்ளது.  இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்து கணவர் நேற்று முன்தினம் இரவு மனைவியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதில், காஸ்கஞ்ச் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டல் ஒன்றிற்குள் டாக்டரான மனைவி நுழைந்துள்ளார். இரவு நேரத்தில் தனியாக ஓட்டலுக்கு சென்ற அவரை கணவர் கண்காணித்து இருக்கிறார்.

இதன்பின், இரவு நேரம் சென்றதும் நள்ளிரவில் மனைவி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் உறவினர்களுடன் நுழைந்திருக்கிறார். அப்போது, அந்த அறையில் அவருடைய மனைவியுடன் வேறு 2 பேர் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதனை கண்டதும் கணவர் ஆத்திரமடைந்து உள்ளார்.  அவரும், அவருடன் வந்திருந்த உறவினர்களான 2 ஆண்களும் சேர்ந்து, மனைவி மற்றும் அவருடன் இருந்த 2 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  கைகலப்பும் ஏற்பட்டது.  இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.  அது சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரலானது.

இந்த வீடியோவானது, ஆண்களுக்கான விவகாரத்திற்கான இந்திய கவுன்சில் சார்பிலான எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. டாக்டர் மனைவியுடன் இருந்தவர்கள் அவருடைய காதலர்கள் என கூறப்படுகிறது.  அவர்களில் ஒருவர் காசியாபாத் நகரை சேர்ந்தவர்.  மற்றொருவர் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

எனினும், கணவருக்கு எதிராக மனைவி புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி ஆகியவை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.