மகனின் முகம் மற்றும் மார்பில் 15 முறை கத்தியால் குத்திய தந்தை.. திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த கொடூரம்!
டெல்லியில் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கவுரவ் சிங்கால் முகம் மற்றும் மார்பில் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (29). இவர், உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கவுரவ் சிங்காலுக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, கூர்மையான ஆயுதத்தால் கவுரவ் சிங்காலுவை தாக்கி கொலை செய்தார். பின்னர், உடலை மறைக்கும் முயற்சியில், கவுரவ் உடலை இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தார்.
முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக தந்தை - மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் கவுரவ் சிங்கால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அங்கித் சவுகான் கூறுகையில், கவுரவின் தந்தை ரங்க்லால், 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 15 லட்சம் ரொக்கத்துடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். ரங்லால், கவுரவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது கவுரவ் தனது தந்தையை அறைந்ததாகவும் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரங்கலால், தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, கவுரவை கொன்றுவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றார்.