ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி கிட்.. ஒன்றிய அரசு சூப்பர் அறிவிப்பு!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு வரும் பொருட்களுடன் சேர்த்து 6 பொருட்களை இலவசமாக வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்தியா முழுவதும் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது. அதில் PHH-AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை முன்னுரிமை பெற்ற ஒன்றாகும். இந்த அட்டைதரர்களுக்கு 35 புழுங்கல் கிலோ அரசி, பச்சரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் PHH, NPHH குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு குடும்ப நபர் ஒருவருக்கு 6 கிலோ என்ற அடிப்படையில் புழுங்கல் அரசி, பச்சரிசி வழங்கப்டுகிறது.

ரேஷனில் விநியோகம் செய்யும் சர்க்கரை 1 கிலோ ரூ.25க்கும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் NPHH-S குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மட்டும் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டுகிறது.

ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.இந்த வருட தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு வரும் பொருட்களுடன் சேர்த்து 6 பொருட்களை இலவசமாக வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த தீபாவளி பரிசு பொருட்கள் PHH, PHH-AAY, NPHH குறியீடு கொண்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தீபாவளி பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளில் எந்த தேதியில் இருந்து வழங்கப்படும் என்ற முறையான அறிவிப்பு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. 100 ரூபாய்க்கு உண்டான பரிசு பொருட்கள் விவரம், வெள்ளை சர்க்கரை - 1 கிலோ, பாமாயில் எண்ணெய் - 1 லிட்டர், ரவை - 1/2 கிலோ, மாவு - 1 கிலோ, போஹா (அவல்).