காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகள்.. மணமகன் ஊர்வலத்தில் நடந்த சம்பவம்.. வைரல் வீடியோ

 

உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின் போது ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்ததால் அதனை பொதுமக்கள் எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில நகைச்சுவையாகவும், சில விமர்சனத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திருமண ஊர்வலத்தின் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் வீடியோ உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் எடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோவில், திருமண ஊர்வலத்தின் போது ரூ.100, ரூ.200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வீசுகின்றனர். மணமகன் ஊர்வலத்தின் போது அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் பணத்தை வீசுகின்றனர். காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கு கூடியிருந்த மக்கள் எடுத்து செல்கின்றனர். இந்த வைரலான வீடியோ அப்சல் மற்றும் அர்மானின் திருமணத்திலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனரோ, “சகோதரரே, பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கவும்” என்றும் மற்றொருவரோ “இவ்வளவு பணம் இருந்தால், நான்கு ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.