ஓய்வு பெறும் தலைமை தேர்தல் ஆணையர்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிப்ரவரி 18ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், திருத்தப்பட்ட ஒன்றிய அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் வழக்கை விசாரித்தனர். பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

18ம் தேதி தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவதால், உடனடியாக புதிய ஆணையர் நியமிக்கப்படலாம் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இடைக்காலத்தில் இப்படி ஏதாவது நடந்தால் , அதற்கான விளைவுகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.