செல்போன் பறிப்பு.. 350 மீட்டர் சிறுமியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற வழிப்பறி கும்பல்.. அதிர்ச்சி வீடியோ

 

பஞ்சாபில் வழிப்பறி  கொள்ளையர்களால் 12 வகுப்பு மாணவி இரு சக்கர வாகனத்தில் சுமார் 350 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப்  மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை 12-ம் வகுப்பு படிக்கும் லட்சுமி (18) என்ற மாணவி தனது இளைய சகோதரியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் லட்சுமியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். 

ஆனால் தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லட்சுமி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார். லட்சுமியின் கையை பிடித்தபடி அந்த தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசென்ற அவர்கள் கடைசியாக அந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர்.

சிறிதுதூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லட்சுமியை பார்த்து மன்னிப்பு விடு என்று  சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன்  சென்றுள்ளான். லட்சுமி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.