காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி!

 

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தக்சும் என்ற இடத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கிஷ்தார் பகுதியில் இருந்து மார்வா பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும், 2 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.