டேங்கர் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 10 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!

 

குஜராத்தில் சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் நதியாட் பகுதியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி  பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி காட்சி அளித்தது.