அறிவு ஜோதியை ஏற்றி வைப்பவர்கள் பிராமணர்கள்.. டெல்லி முதல்வர் சர்ச்சைப் பேச்சு!!
Oct 8, 2025, 07:25 IST
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பிராமணர்கள் மாநாட்டில் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
”பிராமண சமூகம் தான் சமூகத்தின் அறிவு ஜோதியை ஏற்றி வைப்பவர்கள். பிராமணர்கள் வேதங்களையும் ஆயுதங்களையும் வணங்குகிறார்கள். ஆயுதங்கள் மற்றும் வேதங்கள் மூலம் தான் இன்று சமூகத்தையும் நாட்டையும் காக்க முடியும்.
அறிவின் ஜோதியை ஏற்றி, மதத்தை பரப்பி நல்லெண்ணத்தின் உணர்வை வளர்ப்பதன் மூலம் பிராமண சமூகம் எப்போதும் சமூக நலனுக்காகவே உழைத்து வந்துள்ளது
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்” என்று டெல்லி பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா பேசியுள்ளார்