மூளையை உண்ணும் அமீபாவால் சிறுவன் பலி.. கேரளாவில் பரபரப்பு !

 

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இருமூளிபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் பிரசாத். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் மிருதுல் (14). இவர், கோழிக்கோடு பரூக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் வாந்தி மற்றும் தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், சிறுவன் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸின் என்ற அமீபாவால் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த மரணத்துக்கு காரணம் மூக்கு வலியாக மூளைக்கு சென்று அதனை சேதப்படுத்தும் அமீபாவே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி மே 21 அன்று இறந்தார், அதைத் தொடர்ந்து ஜூன் 16 அன்று கண்ணூரில் 13 வயது சிறுமி இறந்தார்.

மக்கள் அசுத்தமான நீர் அல்லது புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம். 5 வயது சிறுமி மலப்புரத்தில் உள்ள கடலுண்டி ஆற்றிலும், மற்ற இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆறுகளிலும் குளித்த பிறகு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் உயிர்வாழ்வு விகிதம் மூன்று சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.