10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. CBSE தேர்வு தேதிகள் அறிவிப்பு!
2024-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான தேதி மற்றும் கால அட்டவணைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவணர்களுக்கான பொதுத் தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு தேர்வுகளும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில், சிபிஎஸ்இ தேதித்தாள்கள் டிசம்பரில் வெளியிடப்பட்டது மற்றும் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வுகள் மார்ச் 21-ம் தேதியும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 5-ம் தேதியும் முடிவடைந்தன. தாள்கள் ஒரே ஷிப்டில் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன.
அந்த வகையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13 -ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.