பலாத்கார முயற்சி.. வேலைக்காரரின் பிறப்புறுப்பை வெட்டிய இளம் பெண் கைது.. பகீர் சம்பவம்!

 

உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு பரபரப்பாக ஓடி வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை காட்டியதும் போலீசார் அதிர்ந்து போய் நின்றனர். அந்த பெண் போலீசிடம் கூறும்போது, அவருடைய கணவர் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் என்றும் வீட்டு வேலைக்காக 23 வயது நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று, வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத சூழலில், வேலைக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எனினும், அதில் இருந்து தப்பினேன் என கூறியுள்ளார். அதன்பின்னரே, அவருடைய அந்தரங்க உறுப்புகளை அறுத்து போலீசிடம் கொண்டு சென்றுள்ளார்.  

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அந்த நபரை மீட்டு பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அந்த நபர் போலீசில் வேறு வகையான விசயங்களை கூறியுள்ளார். அந்த பெண்ணுக்காக சிறுவயது முதல் வேலை செய்து வருகிறேன் என்றும் சம்பவம் நடந்த அன்று, அவரை அழைத்த அந்த பெண், மயக்கமடைய செய்துள்ளார்.

அதன்பின் அந்தரங்க உறுப்புகளை துண்டித்து சென்றுள்ளார் என கூறியுள்ளார். அந்த வேலைக்காரரின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த பெண்ணுக்கு எதிராக போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.  பின்பு அந்த பெண் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சன்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் கூறுகையில், தகராறு காரணமாக பெண் ஆணின் பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக பதிலளித்து, காயமடைந்த நபரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினர், பின்னர் அவரை பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.