ஏப்ரல் 19-ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை.. புதுச்சேரி அரசு அறிவிப்பு

 

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 96.90 கோடி வாக்காளர்கள் ஓட்டுபோட ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

 இந்த நாடாளுமன்ற தேர்தலில் 26 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ஆண்கள் 4,80,569, பெண்கள் 5,42,979, மூன்றாம் பாலினத்தவர் 151 பேர் என மொத்தம் 10, 23, 699 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 85 வயதுக்கு வாக்காளர்கள் மேற்பட்டவர்கள் 1,609 பேர், மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் 1,322 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அரசு, அரசு பொதுத்துறை, சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.