திருப்பதி லட்டில் கலப்பட நெய்! 4 பேர் கைது

 

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டு தயாரிப்பதற்காக கலப்பட நெய் அனுப்பி வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி லட்டில் மாமிச உணவு கலந்துள்ளதாக எழுந்த சர்ச்சையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர் டைரி உரிமையாளர் ராஜசேகர், உத்தரப்பிரதேச நெய் உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் விபின் குப்தா, பொமில் ஜெயின், அபூர்வா சவடா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.