3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த ஏசி.. 19 வயது இளைஞர் பலி.. அதிர்ச்சி வீடியோ!

 

டெல்லியில் ஏசி ஒன்று 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் தோரிவாலா பகுதியில் தேசபந்து குப்தா சாலையில் ஜித்தேஷ் (18) என்பவர், அவருடைய நண்பரான பிரான்ஷு (17) என்பவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஜித்தேஷ், தெருவில் ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி நண்பருடன் பேசியபடி காணப்பட்டார்.  இறுதியாக ஜித்தேஷ் செல்லும் முன், அவரை அழைத்து பிரான்ஷு கட்டி பிடித்து கொண்டார்.

அதற்கு அடுத்த சில வினாடிகளில் பிரான்ஷு நகர்ந்ததும், ஏசி ஒன்று 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதில், ஜித்தேஷ் தலை மீது அது விழுந்து தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். பிரான்ஷுவும் காயமடைந்து உள்ளார். இதன்பின் உடன் இருந்தவர்கள் பிரான்ஷுவை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.