வீட்டுப்பாடம் செய்யாத சிறுமி.. கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. காதில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு
Updated: Aug 23, 2024, 02:11 IST
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2-ம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் என்ற ஆசிரியர் சிறுமியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.