பாம்பை கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

 

பீகாரில் 1 மாத குழந்தை பாம்பை கடித்துத் துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார் என்பவரின் ஒரு வயது மகன் ரியான்ஷ் குமார், வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சிறிய வகை பாம்பு ஒன்று வந்துள்ளது. பாம்பை கண்ட அந்த குழந்தை. விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் பிடித்து வாயில் வைத்து கடித்துள்ளது.

குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையிடம் இருந்து பாம்பை பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தை கடித்ததால் காயமடைந்த அந்த பாம்பு உயிரிழந்தது. விஷத்தன்மை இல்லாத பாம்பை கடித்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குழந்தை கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.