புதிய குடியரசுத் தலைவர் யார்..? இன்று ஓட்டு எண்ணிக்கை

 

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி முடிந்த நிலையில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம், வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. எம்.பி.,க்களின் ஓட்டுக்கு தலா 700 புள்ளியும், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும்.

இந்நிலையில், நாட்டின் 15வது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவா அல்லது எதிர்க்கட்சிகள் சார்பில் நின்ற யஷ்வந்த் சின்ஹாவா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.