கால் விரல்களை நக்க சொல்லி தலித் சிறுவனை துன்புறுத்திய உயர் சாதி இளைஞர்கள்... உத்தரபிரதேசத்தில் கொடூரம்! தீயாய் பரவும் வீடியோ

 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை தாக்கி, ஒருவர்  கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் வைரலான 2 நிமிட 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், சிறுவன் தரையில் அமர்ந்து காதுகளில் கைவைத்திருக்கிறார்.குற்றம் சாட்டப்பட்டவர் மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்திருக்கிறார். சுற்றி உள்ள சிலர் பாதிக்கப்பட்டவர்  பயந்து நடுங்குவதை பார்த்து  சிரிக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரிடம் உயர் சாதி  பெயரை உச்சரித்து அவரை துஷ்பிரயோகம் செய்கிறார். இனி அப்படி ஒரு தப்பு செய்வீர்களா? என  மற்றொரு குற்றவாளி பாதிக்கப்பட்டவரிடம் கேட்கிறார்.

இந்த தாக்குதல் வீடியோ வைரலானதையடுத்து, 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 10-ம் தேதி நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள்.

பாதிக்கபட்டவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்  இவர் தனது  விதவை தாயுடன் வசித்து வருகிறார். பாதிக்கப்பட்டவரின்  தாய் குற்றம் சாட்டப்பட்ட சிலரின் வயல்களில் வேலை செய்து வருகிறார். அந்த சிறுவன் தன் தாயார் வேலை செய்ததற்கு அவர்களிடம் பணம் கேட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.