5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி... அரசு வேலை போய்விடும் பயத்தால் நேர்ந்த கொடூரம்!!

 

ராஜஸ்தானில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த நபர் ஒருவர் அரசு வேலை போய்விடும் என்று கருதி தனக்கு பிறந்த 3-வது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்ஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலுகாவின் தியாத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் (35). இவர் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா தேவி (33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது குழந்தையால் தனது வேலையில் எந்த வித பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 5 மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளனர். மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது.

இதுகுறித்து பிகானேர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் கூறுகையில், “ஜான்வர்லால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தம்பதியினர் 5 மாத பெண் குழந்தையை ஐஜிஎன்பி கால்வாயில் வீசியுள்ளனர். தூக்கி வீசப்பட்டதை பார்த்து சிலர் கூச்சலிட்டதால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மக்கள் குழந்தையை கால்வாயிலிருந்து வெளியே எடுத்தனர், ஆனால் அதற்குள் அவள் இறந்துவிட்டாள். தங்கள் மகளைக் கொன்ற வழக்கில் தம்பதியர் நேற்று கைது செய்யப்பட்டனர். நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், உடந்தையாக இருந்த மனைவியும் சேர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்றார்.

பிகானேர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த தம்பதியினர் 5 மாத பெண் குழந்தையை சத்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கால்வாயில் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.