ரூ.10 நாணயம்: வாங்க மறுத்தால் சிறை!! அதிரடி உத்தரவு

 

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தெரிவித்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் அறிமுகம் படுத்தியது. தாள்களில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விட அதிக காலம் பயன்படுத்திட முடியும் என்பதால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டவை. 

உதாரணமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹)இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம்(₹)இருக்காது. ஆகவே ரூபாய் சின்னம் இல்லாத நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு மக்களே வந்துவிட்டனர். காலப்போக்கில் எந்த 10 ரூபாய் நாணயங்களையும் மக்கள் வாங்க யோசிக்கத் துவங்கிவிட்டனர். இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவெடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றமாகும். 

அதன்படி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களை வாங்க மறுப்பவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீதும் இந்த சட்டத்தின்படி புகார் அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.