300 கிலோ மரத்தை அசால்டாக தூக்கிய கேரள பாகுபலி!! வைரல் வீடியோ

 

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 300 கிலோ மரத்தை அசால்டாக தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் ஏதாவது ஒரு விநோதமான சம்பவங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாவது உண்டு. அப்படிப்பட்ட வீடியோக்களை நாம் பார்க்கும் போது, ஒரு நிமிடம் சற்று பயம் கூட நம் மனதில் தோன்றலாம்.

அந்த வகையில், கேரள மாநிலம் இடுக்கி அருகே தோப்புறான்குடி பகுதியில் ஓண தின ஸ்பெஷலாக மரத்தடியை தூக்கி நடந்து செல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில், பிரதீஷ் என்ற வாலிபர், சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தோளில் தூக்கி உள்ளார். தூக்கியது மட்டுமின்றி, சுமார் 73 மீட்டர் தூரம் வரை நடந்து செல்லவும் செய்துள்ளார்.

இவை, ஒரு போட்டி போல இது நடத்தப்பட்ட நிலையில், சாலையை சூழ்ந்திருந்த பொது மக்கள் அனைவரும், வாலிபருடன் சேர்ந்து ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகத்துடன் ஊக்கமளிக்கவும் செய்தனர்.

சாலை முழுக்க நிரம்பி இருந்த மக்கள் வெள்ளத்தில், ஆரவாரத்திற்கு மத்தியில் உடல் பலத்துடன் மன வலிமையையும் ஒரு சேர, 300 கிலோ எடையுள்ள மரக் கட்டையை தூக்கி கொண்டு 73 மீட்டர் நடக்கவும் செய்துள்ளார் பிரதீஷ். அதன் பின்னர், அவர் மரக்கட்டையை சாலையில் போட்டதும் ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வேற லெவலில் கரகோஷித்து பாராட்டவும் செய்தனர்.


இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பாகுபலி முதல் பாகத்தில் பிரபாஸ் கல்லால் ஆன சிவ லிங்கத்தை தோளில் தூக்கிச் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

அவர் தூக்கிய கல்லாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கேரள இளைஞர் நிஜமாகவே 300 கிலோ மரத்தை தூக்கிச் சென்றதால் அவரை நிஜ பாகுபலி என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.