இன்று முதல் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்!!

 

இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (ஜூலை 15) இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.

இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு நுழைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒன்றிய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.