வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திடீர் வாபஸ்...! வழக்கம்போல் இன்று வங்கிகள் இயங்கும..

 

நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (நவ. 19) நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், வங்கி சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் வாயிலாக பிரச்னையை விளக்கியது.

டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமூக உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் இன்று நடக்க இருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்ற இந்திய வங்கிகள் சங்கத்தினர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாதகமான பதில் அளித்தனர். இதனால் இன்று நடத்துவதாக இருந்த வேலை நிறுத்தத்தை பணியாளர்கள் கைவிட்டு வழக்கம் போல வங்கி சேவையில் ஈடுபட உள்ளனர்.