வளர்ப்பு நாயை கேலி செய்த 5 வயது சிறுவன்.. சரமாரியாக தாக்கிய உரிமையாளர்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்
Updated: Oct 7, 2024, 02:15 IST
பஞ்சாபில் நாயின் உரிமையாளர் சிறுவனை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்க தொடங்கியுள்ளது.
அதில் ஒரு 5 வயது சிறுவன் நாயைப் பார்த்து குறைப்பது போல் கேலி செய்துள்ளான். இதனால் கோபமடைந்த நாயின் உரிமையாளர், அந்த சிறுவனைப் பிடித்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். மேலும் அந்த சிறுவனை தரையில் தூக்கி வீசி, அவனை காலால் எட்டி மிதித்துள்ளார்.