செங்கல் சூளை புகையை சுவாசித்த 5 பேர் மூச்சுத்திணறி பலி.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!!

 

சத்தீஸ்கரில் செங்கல் சூளையில் செங்கலை சூடுபடுத்த தீ வைத்துவிட்டு அதன் மீது படுத்து உறங்கிய 6 பேரில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மஹசாமுண்ட் மாவட்டம் காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்துள்ளனர். பின்னர், தொழிலாளர்கள் 6 பேர் செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடப்பதை பார்த்து அவர்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் யாரும் எழும்பாத நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 5 பேர் உயிரிழந்த நிலையிலும் ஒரே ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் செங்கள் சூளையில் செங்கல சூடுபடுத்த தீ வைத்துவிட்டு அதன் மேல் அடுக்கில் படுத்து உறங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.