325 காலியிடங்கள்... இந்திய அனு மின் கழகத்தில் வேலை... விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..!
இந்திய அணு மின் கழகத்தில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய அணு மின் கழகம் Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பதவி: Executive Trainees
காலிப்பணியிடங்கள்: 325
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்), 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் ஆகிய பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்ச வயது 28.04.2023 தேதியின் படி 26 வயதாக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: கேட் மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் விண்ணப்பிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய அணு மின் கழகத்தின் www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.