200 காலி பணியிடங்கள்.. 12-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!!

 

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT) 

சம்பளம்: 19,900- 63,200 (நிலை - 2)

முக்கியமான நாட்கள்: இதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.   

காலியிடங்கள்: 200

கல்வித் தகுதி:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்திற்கு 40 ஆங்கில  வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/ என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.