ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை.. வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 

ஜூலை மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 12 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஜூலை மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஜூலை 3, 2024 - புதன்கிழமை - பெஹ் டீன்க்லாம் பண்டிகை (ஷில்லாங்)
ஜூலை 6, 2024 - சனிக்கிழமை - எம்ஹெச்ஐபி தினம் (ஐஸ்வா)
ஜூலை 7, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 8, 2024 - திங்கட்கிழமை - காங் ரதஜாத்ரா (இம்பால்)
ஜூலை 9, 2024 - செவ்வாய்கிழமை - ட்ருக்பா ட்ஷேஷி (காங்டாக்)
ஜூலை 13, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை


ஜூலை 14, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 16, 2024 - திங்கட்கிழமை - ஹரேலா (டேராடூன்)
ஜூலை 17, 2024 - செவ்வாய்கிழமை - முஹர்ரம் பண்டிகை
ஜூலை 21, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 27, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
ஜூலை 28, 2024 - ஞாயிற்றுக்கிழமை