குஜராத் பட்டம் திருவிழாவில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி.. 176 பேர் படுகாயம்!

 

குஜராத்தில் உத்தராயணம் திருநாளைக் கொண்டாட பட்டம் விடும்போது நிகழந்த விபத்துகளில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தானில் மகரசங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகின்றது. குளிா்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்குவதையும், அறுவடை காலத்தை கொண்டாடும் விதமாகவும் உத்தராயணம் (தை மாதப் பிறப்பு) திருநாளைக் கொண்டாடுவா்.

மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து வானில் பட்டத்தை பறக்க விட்டு உத்தராயணம் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு உத்தராயணம் திருநாள், குஜராத் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாக கொண்டாடப்பட்டது. இதனை பட்டம் விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர்.

இந்த நாளில் குஜராத் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கமாகும். நேற்று முன்தினம் வார இறுதி நாள் என்பதால் தங்களது வீட்டின் மாடிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்று கொன்டிருந்த 4 குழந்தைகள் உள்பட 11 போ் பட்டங்களின் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து பலியாகினர் மற்றும் 130 போ் காயமடைந்தனர். பட்டம் விடும்போது உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து 46 பேரும் காயமடைந்தனர். இதில் அதிகபட்சமாக அகமதாபாதில் மட்டும் நூல் அறுத்து 59 பேரும், தவறி விழுந்து 10 பேரும் காயமடைந்துள்ளனா்.

விஸ்நகரைச் சேர்ந்த கிருஷ்ணா தாகூர் என்ற 3 வயது சிறுமி நூலினால் பலத்த காயம் அடைந்ததால் இறந்தார், ராஜ்கோட்டைச் சேர்ந்த ரிசாப் வர்மா (6), பாவ்நகரைச் சேர்ந்த கிர்த்தி யாதவ் (2.5) மற்றும் பரூச்சில் 8 வயது சிறுவன் ஆகியோர் கூர்மையான நூலால் கொல்லப்பட்டனர்.