மஹாராஷ்ட்ராவில் புலியுடன் போராடி வென்று செல்ஃபி எடுத்த இளம் பெண்!

புனே: மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் தனது ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற புலியுடன் போராடியுள்ளார் இளம் பெண். ரூபாலி மேஷ்ரம் என்ற் அந்த 23 வயது பெண் தனது ஆட்டுக்குட்டி அலறுவதைக் கேட்டு வெளியே வந்துள்ளார். அங்கே புலியின் பிடியில் ஆடு இருந்ததைப் பார்த்தவர் கம்பை எடுத்து புலியை விரட்டப் போயுள்ளார். ஆட்டை விட்டுவிட்டு ரூபாலியை தாக்க ஆரம்பித்தது புலி. அதைப் பார்த்த தாயார் ஜிஜாபாய் விரைந்து வந்து ரூபாலியை இழுத்து வீட்டுக்குள் வந்து விட்டார்.
 

மஹாராஷ்ட்ராவில் புலியுடன் போராடி வென்று செல்ஃபி எடுத்த  இளம் பெண்!

புனே: மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் தனது ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற புலியுடன் போராடியுள்ளார் இளம் பெண். ரூபாலி மேஷ்ரம் என்ற் அந்த 23 வயது பெண் தனது ஆட்டுக்குட்டி அலறுவதைக் கேட்டு வெளியே வந்துள்ளார். அங்கே புலியின் பிடியில் ஆடு இருந்ததைப் பார்த்தவர் கம்பை எடுத்து புலியை விரட்டப் போயுள்ளார்.

ஆட்டை விட்டுவிட்டு ரூபாலியை தாக்க ஆரம்பித்தது புலி. அதைப் பார்த்த தாயார் ஜிஜாபாய் விரைந்து வந்து ரூபாலியை இழுத்து வீட்டுக்குள் வந்து விட்டார். புலியுடன் போராடியதில் ரூபாலியின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதை செல்ஃபி எடுத்துள்ளார். பிறகு தான் டாக்டரிடம் சென்று காயத்திற்கு மருந்து போட்டிருக்கிறார்.

புலியை விரட்டிய ரூபாலியைப் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நல்லவேளை சிறு காயங்களுடன் தப்பி விட்டாய் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

தாயார் ஜிஜாபாய், மகளையும் சேர்த்து புலி கொன்று விடுமோ என்று பயந்திருக்கிறார். ஆட்டுக்குட்டியை புலியிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஆனால் மகளைக் காப்பாற்றி விட்ட பெருமிதம் அந்த தாயாரிடம் இருக்கிறது.

இப்போவே கம்பால் புலியை ஒரு பெண் விரட்டி இருக்கிறாரே. அப்போ, புலியை முறத்தால் விரட்டி அடித்த தமிழச்சி உண்மைதான் போலிருக்கு!

– வணக்கம் இந்தியா

From around the web