கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

 
Soumya-Swaminathan

கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது என்பது மிக ஆபத்தான போக்கு என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல நாடுகளும் தற்போது முதல் தடுப்பூசி ஒன்றாகவும் 2-வது டோஸ் வேறாகவும் கலந்து செலுத்தி வருகின்றன. அதில் சில நாடுகள் பக்க விளைவுகளின் ஆபத்திலிருந்து தப்பிக்க 2-வது டோஸுக்கு வேறு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றன.

ஒரு சில நாடுகள் பீட்டா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனாவுக்கு எதிராக சிறந்த பலனை அளிப்பதற்காக ஆய்வின் தரவுகளைக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளன.

குறிப்பாக சில ஏழை நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக வேறு வழியின்றி வெவ்வேறு நிறுவங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை கலந்து செலுத்தும் முடிவுக்கு வருகின்றன. எதோ ஒரு வகையில், இது ஒரு இயல்பான போக்காக மாறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார தலைமை விஞ்ஞானி சௌமிய சாமிநாதன் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் “இது ஒரு ஆபத்தான போக்கு. தடுப்பு மருந்துகளை கலந்து பொருத்துவதில் நாம் ஒரு சரியான தரவு மற்றும் ஆதாரம் இல்லாத நிலையில் இருக்கிறோம்” என்று கூறினார்.

“இது மக்கள் தங்களுக்கான இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ் தடுப்பூசியை எப்போது, எந்த நேரத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்பதை குடிமக்களே தீர்மானிக்கத் தொடங்கினால் அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

From around the web