பிரான்சில் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை கழுத்து அறுத்த கொடூரம்... தப்ப முயன்ற நபர் சுட்டுக் கொலை

 
பிரான்சில் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை கழுத்து அறுத்த கொடூரம்... தப்ப முயன்ற நபர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காவல் நிலையத்தில் நிர்வாகப் பணி புரியும் பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பிரெஞ்சு தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் உள்ள காவல் நிலையத்தின் பாதுகாப்பான நுழைவு பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த தாக்குதல் நடந்தது.

கொல்லப்பட்ட ஸ்டீபனி என்ற பெண் அதிகாரி 49 வயதான நிர்வாக ஊழியர், அவர் தேசிய போலீஸ் சேவைக்காக பணியாற்றியவர் என்று தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மீண்டும் பிரான்ஸ் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்று அதிபர் இமானுவேல் மாக்ரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கத்தியால் குத்தியவன் மத அடிப்படைவாதி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர் துனிசிய நாட்டைச் சேர்ந்தவர், பிரான்சில் முறையான ஆவணங்களுடன் வசித்து வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் 2009-ம் ஆண்டு சட்டவிரோதமாக பிரான்சுக்கு வந்தார், ஆனால் பின்னர்  முறையான ஆவணங்களை பெற்றுள்ளார் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

From around the web