பார்வையாளர்களே இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அந்நாட்டு கவர்னர் அறிவித்துள்ளார். உலக முழுவதும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரென்ஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒத்திவைக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருவதால், இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு
 

பார்வையாளர்களே இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி!!மெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அந்நாட்டு கவர்னர் அறிவித்துள்ளார்.

உலக முழுவதும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரென்ஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒத்திவைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருவதால், இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதே இந்த ஆண்டு தான்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடப்பாண்டு ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த அந்நாட்டு டென்னிஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு போட்டியை நடத்துவதற்காக நியூயார்க் ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு ஆளுநர் ஆண்ட்ரூ, பார்வையாளர்கள் இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கியதால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web