இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் - அமெரிக்கா அறிவிப்பு

 
இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் - அமெரிக்கா அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  இதேபோன்று மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய தேவையும் உள்ளது என அரசிடம் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளதற்கு பல உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. இவ்வாறாக கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியாவுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இதுகுறித்து கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்” என  தெரிவித்துள்ளது.

From around the web