மனிதர்களை விட அழகாக தண்டால் எடுத்த சிம்பன்ஸி - இணையத்தை கலக்கும் வீடியோ!

 
Chimpanze

சீனாவில் சிம்பன்ஸி ஒன்று சுற்றுலா பயணிகளை காப்பி அடித்து புஷ் அப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் சாங்கிங் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது. அதில், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி வெளியில் நின்ற படி புஷ் அப் செய்தனர்.

China

இதனை கண்ட அந்த சிம்பன்ஸி அவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக அவர்களை விட அழகாக புஷ் அப் செய்தது. மேலும், அவர்களை பார்த்து ஈ, ஊ என்றும் அவர்களை போலவே செய்து காட்டியது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகவே பரவி வருகிறது.

From around the web