இங்கிலாந்து கார் குண்டு வெடிப்பு: தற்கொலை தாக்குதல் நடத்தியவர் புகைப்படம், விவரம் வெளியீடு

 
England

இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்கொலை தாக்குதல் நடத்திவரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் கட்ட விசாரனையில், காரில் பயணித்த பயணி உயிரிழந்தார், காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணை நடத்தப்பட்டதில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதும், மருத்துவமனைக்கு வெளியே வெடித்து சிதறியே டாக்சியில் பயணித்த பயணியே வெடிகுண்டுயை எடுத்துச் சென்றதையும் போலீசார் உறுதி செய்தனர்.

Emad-al-swealmeen

மேலும், தற்கொலை செய்தவர் லிவர்பூலில் வேலை பார்த்துவரும் ஒரு பீசா செஃப் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது புகைப்படமும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

தகவல்களின்படி, என்ஸோ அல்மேனி எமத் ஜமில் அல்-ஸ்வெல்மீன் என அறியப்படும் அந்த நபர், இங்கிலாந்தில் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். ஈராக்கில் பிறந்து வளர்ந்த அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திற்கு வந்தவர்.

அவர் 2017-ல் மால்கம் மற்றும் எலிசபெத் ஹிட்ச்காட் ஆகியோரால் அழைத்துச் செல்லப்பட்டு, லிவர்பூல் கதீட்ரலில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டார்.

Malcolm-Elizabeth

இவர் குறித்து பேசிய ஹிட்ச்காட், அல்மேனிக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், மத்திய லிவர்பூலைச் சுற்றி கத்தியை எடுத்துச் சென்றதற்காக 2014-ல் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

நாட்டையே உலுக்கிய இந்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லிவர்பூலில் நடத்தப்பட்ட சோதனையில் 21, 26 மற்றும் 29 வயதுடைய மூவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயது நிரம்பிய நான்காவது நபர், அதே பயங்கரவாத குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார்.

From around the web