கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய இளைஞர்! உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க நண்பர்கள்!!

 
கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய இளைஞர்! உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க நண்பர்கள்!!

அமெரிக்காவில் பணிபுரிந்து சமீபத்தில் தமிழ்நாடு திரும்பியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்

சென்னையைச் சேர்ந்த 34வயது இளைஞரான புருஷோத்தமன் ரகுநாத்-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் மத்தியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் விரைவாக மோசமடையத் தொடங்கியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க விரைந்துள்ளனர். மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் கடைசியாக வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றில் இடம் கிடைத்துள்ளது.

அங்கு சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் மேலும் மோசமடையத் தொடங்கியதால் எக்மோ கருவியுடன் சிகிச்சை தேவைப்பட்டது.  டாக்டர்.ரேலா மருத்துவமனைக்கு  மாற்றம் செய்யப்பட்டார்.அங்கு ஒரு வாரம் எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை நடந்துள்ளது. எக்மோ கருவி சிகிச்சை எவ்வளவு நாட்கள் தேவைப்படும், சைட்டோசார்ப் தெரப்பிக்கு மாற்றனுமா என்று இன்னும் தெரியவில்லை. மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சைக்குத் திரும்பிய பிறகும் ஐசியூவில் சிகிச்சை தொடர வேண்டும்.

காப்பீட்டுத் திட்டத்தின் உச்சவரம்பைத் தாண்டி மருத்தவமனைச் செலவு ஆகிவிட்டதால், குடும்பத்தினரின் சேமிப்பிலிருந்து செலவழித்து அதுவும் கரைந்து விட்டது. பெற்றோர், மனைவி, 5 வயது மகள் ஆகிய நால்வரும் புருஷோத்தமனின் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளனர். எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேமிப்பையும் செலவழித்து விட்ட புருஷோத்தமனின் சிகிச்சைக்கு உதவுதற்கு அவருடைய நண்பர்கள் முன் வந்துள்ளனர்.

சாமுவேல் ஜெய் பிரகாஷ் மற்றும் பாஸ்கர் ஜெயக்குமார் என்ற புருஷோத்தமனின் இரு நண்பர்கள் சேர்ந்து கோ ஃபண்ட் மூலமாக நிதியுதவி திரட்டி வருகிறார்கள். மருத்துவச் செலவுகளுக்கான தேவைகளுக்காக 65 ஆயிரம் டாலர்கள் வரை நிதியுதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். https://gofund.me/be63127a என்ற இணைப்பில் கூடுதல் விவரங்களையும் நிதியுதவி செய்வதற்கான சுட்டியையும் காணலாம்.

புருஷோத்தமனும் அவர் மனைவி, மகளும் சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web