எங்கள் கலாச்சாரத்தில் தலையிட வேண்டாம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்

 
Suhail-Shaheen

எங்கள் கலாச்சாரம் மற்றும் பெண் மீதான அணுகுமுறையைில் தலையிட வேண்டாம் என தாலிபான் செய்தி தொடர்பாளர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஊடகமான ஃபாக்ஸ் நீயூஸ்-க்கு பேட்டியளித்த தாலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. ஆனால், பெண்கள் புர்கா அணியாமல் கல்வி பயில வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் பார்வையை நான் எதிர்கிறேன்.

இது எங்கள் கலச்சாரத்தை மாற்றும் செயலாகும், எங்கள் கலச்சாரத்தின் படி பெண்கள் புர்கா அணிந்த படி தான் கல்வி கற்க வேண்டும். புர்கா அணிந்த படி வேலை செய்ய வேண்டும்.

இரு நாட்டின் நலனுக்காக நாம் எவ்வாறு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான வழியில் ஒன்றாக பணியாற்ற முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் உரிமை பற்றி எந்த பிரச்சினையும் இருக்காது. அவர்களுடைய கல்வி, வேலை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் உங்கள் கலாச்சாரத்தை மாற்ற விரும்பவில்லை என்பதால், நீங்கள் எங்கள் கலாச்சாரத்தை மாற்ற விரும்பக்கூடாது என சுஹைல் ஷாஹின் கூறினார்.

From around the web