ஊரடங்கை மீறி விருந்தில் பங்கேற்ற பிரதமர்... தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பிரதமர்..!

 
Borris-Johnson

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, ஊரடங்கு பொதுமுடக்கம் அமலில் இருந்தது. அப்போது அந்த கட்டுப்பாட்டை மீறி பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது அலுவலக கார்டனில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் இதில் அவர் மீது கோபம் கொண்டனர். அந்த கோபத்தை அடக்க முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அவர் நேற்று நாடாளுமன்ற கீழ்சபையில் பேசியபோது முதன் முதலாக தனது தவறை ஒப்புக்கொண்டு அதற்காக மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

அது, ஒரு வேலை நிகழ்வு என்று தான் நம்பிவிட்டதாக அவர் கூறினார். ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி (தொழில்கட்சி) தலைவர் கெய்ர் ஸ்டார்மர், போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

From around the web